Skip to main content

Himalayan blunder

 இந்த குறிப்புகள் ஹிமாலயன்  பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து  எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர்.      துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இ...

Midnight in chernobyl tamil

இந்த குறிப்புகள் Adam Higginbotham எழுதிய Midnight in Chernobyl  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது .செர்னோபில் விபத்தைப்பற்றி குறிக்கிறது

SATURDAY APRIL 26 1986 4:16 Chernobyl Atomic energy station ,Ukraine

        26 வயதான Senior lieutenant Alexander Logachev ரேடியேசன் மாதிரியான ஆபத்துகளில் இருந்து தன்னை பாதுகாக்க ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்.ரேடியேசனை அளவிட Chernobyl Nuclear Reactor no 4 ஐ நெருங்கி வரும்பொழுது அவரோட Radiation dosimeter 51 ராண்ட்ஜன் ரேடியேசன் அளவிடுகிறது.    
    திடீரென்று Radiation  Level அதிகரிக்கிறது.Radiation Dosimeter 2080 ராண்ட்ஜன் அளவு காண்பிக்கிறது.இனி சிறிது நேரம் அங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து அந்த இடத்தை விட்டு விரைவாக வெளியேறினார்.

 The Soviet Prometheus

         12 நூற்றாண்டில் செர்னோபில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது.பின்னர் அது நகரமயமாக்கப்பட்டது.1969 ம் வருடம் அமெரிக்கா நிலவில் தரை இறங்கியது.இதற்குப்போட்டியாக சோவியத் Nuclear Energy-ல பயங்கர சாதனை புரியவேண்டுமென முடிவு செய்தனர்.அதற்ககாக அவர்கள் செர்ணோபில்லை தேர்வு செய்தனர்.ஆனால் அந்த காலக்கட்டத்தில் போர், ஊழல் முதலான காரணங்களால் பணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

    1972 ம் வருடம் Viktor Bryukhanov என்பவரை Chernobyl Power plant வோட Director ஆ நியமித்தார்கள்.Vladimir lenin power plant எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.Bryukhanov புரோமிதியஸ் சிலையை அங்கு பதிக்கிறார்.புரோமிதியஸ் என்பவர் கிரேக்க கடவுள் நெருப்பை திருடி மனிதசமுதாயத்திற்கு வெளிச்சத்தை அறிமுகப்படுத்தியவர்.அணுசக்தியின் வழியாக வீடுகள் வெளிச்சத்தை பெறுவதை குறித்து அச்சிலை அங்கு நிறுவப்பட்டது.ஆனால் அந்த சிலைக்கு மற்றொரு இருண்டபக்கம் இருந்தது.கடவுளின் இரகசியத்தை பரோமிதியஸ் வெளியிட்டதால் கோபமுற்ற ஜீயுஸ (Greek God)மிகப்பெரிய கழுகை அனுப்பி புரோமிதியஸினது நுரையீரலை கொத்தி உண்ண வைத்தார்.மேலும் கோபமுற்று மனிதசமுதாயத்தின் முதல் பெண்ணிடம் பண்டோரா பெட்டகத்தை ஒப்படைத்தார்.பெட்டகத்தை திறந்ததும் வெளியான தீயசக்திகள் மறுபடியும் உட்செல்லவில்லை.

 Pripyat

    Pripyat நதி செர்னோபிலில் இருந்து சிறுதுதொலைவில் அமைந்துள்ளது.செர்னோபில் இஞ்ஜினியர்கள்,டாக்டர்கள்,ஆசிரியர்கள் போன்ற உயர்வர்க்கத்தினர் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.நீச்சல்குளம்,கேளிக்கை அரங்கு மற்றும் பார்க் முதலான உயர்தர வசதிகளுடன் கூடிய நகரமாக அது விளங்கியது.


 Reactor No 4

                 Alexander Yuvchenko senior mechanical engineer  இரவு நேரப்பணியில் தன்னை வருத்திக்கொண்டிருந்தார்.அவரது வேலை Maintenance Shutdown நடக்கும் பொழுது Reactorno4 ஐ குளிர வைப்பது அவரதுப்பணி குறுக்கீடு இல்லாமல் நடந்துக்கொண்டிருந்தது.ஆனால் Control room இஞ்ஜினியர்களது பணி எளிதானதாக இல்லை.

 RBMK Reactor

    சோவியத் அதிகப்படியான  RBMK Nuclear reactor ஐ உபயோகப்படுத்தி வந்தது.மேற்கத்தியநாடுகள் பயன்படுத்திய Nuclear reactor Water Water Design ஆனால் RBMK Reactor Water graphite Design ஐ பெற்றிருந்தது.Water Water DesignSteam அதிகரிக்கும் பொழுது சில Neutrons குறையுது அதனால் Reactivity யும் குறையுது.இதனால் Nuclear fission(அணுக்கரு இணைவு )என்ற தொடர்ச்சியான நிகழ்வு நிறுத்தப்படுகிறது.ஆனால் Rbmk Reactor Steam அதிகரிக்கும் பொழுது Nuclear fission தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.இதைத்தடுப்பதற்கு கண்டிப்பாக Control rods-Reactor ல் நுழைக்க வேண்டும்.அப்பொழுதுதான்     Fission தடுத்து நிறுத்தப்படும்.ஆனால் இதில் சிறிது தவறு நடந்தாலும் Reactor வெடித்து சிதறி விடும்.
 RBMK Reactor வோட Emergency Button AZ-5 மொத்த பவரும் Zero Status-க்கு வந்தால்தான் Immediate Shutdown ஆகும்.ஒருமுறை Leningrad Nuclear Power station ல் Nuclear reactor உருகிவிட்டது.அதனால் சோவியத் Nuclear specialist உதவியால் RBMK -க்கு தகுந்த மாதிரி Manual தயார் செய்து இஞ்ஜினியர்களோட பயன்பாட்டிற்கு வந்தது.அதற்கு முன்னதாக பல விபத்துகள் சோவியத்தில் நடந்துள்ளது.ஆனால் அனைத்தும் மறைமுகமாகவே வைக்கப்பட்டன.அதனால் அதிகப்படியான பேரிழப்பை சோவியத் சந்திக்க நேர்ந்தது.

Control Room

                 செர்ணோபில் பேரழிவு  ஏற்பட்ட Reactor No 4 ல் அன்றைய இரவு பணியில் இருந்தவர்கள் Anatoly Dyatlov deputy chief engineer ,Alexander Akimov foreman,Leonid Toptunov senior reactor control engineer.Dyatlov ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்.Nuclear Submarine-ல் பணியாற்றியவர்.ஆனால் அவரால் Nuclear power plant workers-மீது நல்லுறவை பேணமுடியவில்லை.அன்றைய இரவு Toptunov Control Unit-ல் வேலை செய்து கொண்டிருந்தார்.Power 720 Megawatt-ஆக இருக்கும் பொழுது Dyatlov அங்கு சென்று Power 200 Megawatt -ஆக மாற்றுமாறு கட்டளை பிறப்பித்தார்.Akimov அது தவறான முடிவு என வாதிட்டார்.ஆனால் Dyatlov அதை ஏற்றுகொள்ளவில்லை.வேறு வழியில்லாமல் Power 200 Megawatt ஆகக்குறைக்கப்பட்டது.ஆனால் Toptunov தவறுதலாக Auto Plight Mode-க்கு மாற்றி விடுகிறார்.இதனால் Power மெதுவாகக்குறைந்து 0 Megawatt என்ற அளவிற்கு மாறுகிறது.இதனால் Reactor-ல Xenon 135 விஷம் அதிகரிக்கிறது.இந்த நேரத்தில் கண்டிப்பாக Shutdown செய்ய வேண்டும்.ஆனால் Dyatlov அதற்கு அனுமதி மறுத்து விட்டார்.ஏனெனில் மூன்று முறை சோதனை தோல்வி அடைந்து விட்டது.அன்றையதினம் முடியவில்லை எனில் அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் ஆனால் Dyatlov காத்திருக்க விரும்பவில்லை.அவர் Toptunov-விடம் Power ஐ அதிகரிக்க வற்புறுத்தினார்.Toptunov மறுக்க Dyatlov அவரை பணியில் இருந்து ரத்து செய்துவிடுவதாக வற்புறுத்தினார்.Yuri Tregub senior reactor control engineer ன் உதவியுடன் Power 200 Megawatt என்ற நிலைக்கு கொண்டு வருகிறார்.ஆனால் Nuclear fission தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.அதை உணர்ந்த AKIMOV AZ-5 ஐ அழுத்தி Immediate shutdown செய்தார்.Control rod பெரும்பாலும் Boron carbide ஆல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் Control rod Graphite Tip Boron carbide-ஆல் வடிவமைக்கப்பட்டிருந்தது.இது Nuclear fission-ஐ அதிகப்படுத்தியது.இறுதியாக அதிக அழுத்தத்தின் காரணமாக  Reactor வெடித்து சிதறியது.மறுகணம் அதிகப்படியான சத்தத்துடன் கட்டிடமே குலுங்கியது.

Catastrophe

                ஆபத்தை உணர்ந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க விரைந்தனர்.Control rod இடையில் சிக்கி கொண்டது போன்று Control Room -ல் உள்ள நபர்களால் உணரப்பட்டது.Dyatlov தன்னோட Trainee இரண்டு நபர்களிடம் Control rod ஐ  சரி செய்ய அனுப்பினார்.பின்னர் தான் அது முடியாத காரியம் என உணர்ந்து அவர்களை அழைக்க விரைந்தார்.அதற்குள் அவர்கள் இருவரும் அங்கிருந்து மறைந்தனர்.Akimov மற்றும் Toptunov Coolant Pipe Valve-ஐ சரி செய்ய அனுப்பினார்.Dyatlov அனுப்பிய இரண்டு Trainee-களும் மொத்த சிதிலத்தையும் பார்க்கின்றனர் மற்றும் Radiation-ஆல் பாதிக்கப்படுகின்றனர்.இருவரும் விபத்தை பற்றி மற்றவர்களிடம் கூறினார்.Dyatlov அதை நம்பவில்லை.அவரே சென்று விபத்தை பார்வையிட்டார்.Akimov, Toptunov தங்களோட வெறும் கைகளால் Valve-ஐ திறந்து விட்டனர்.கடுமையான Beta மற்றும் Gamma கதீர்வீச்சினால் பாதிக்கப்பட்டனர்.Director Viktor Bryukhanova தகவலறிந்து  அங்குவிரைந்தார்.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் Moscow விற்கு தகவல் அனுப்பினார்.

Evacuation
    
    மாஸ்கோவின் அதிகாரிகள் Kiev நகரத்திற்கு விரைந்தனர்.Viktor bryukhanova ரேடியேஷன் அளவு சாதரணமாக உள்ளது.மக்கள் இடம் பெயரத்தேவையில்லையென கூறினார்.ஆனால் அதிகாரிகள் சிலர் நம்ப மறுத்ததன் காரணமாக ரேடியேஷன் அளவிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
இறுதியாக ரேடியேசன் அளவிடப்பட்ட பொழுது 2080 ராண்ட்ஜன் அளவிடப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பிரிபியாட் மற்றும் செர்ணோபில்லை கைவிடத்துணிந்தனர்.
    பிரிபியாட் நகரவாசிகள் விபத்தைபற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை.பிரிபியாட் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பியது.மருத்துவர்கள் ரேடியேஷன் பாதித்தவர்களுக்கு சிகிட்சை அளிப்பதற்கான வழியை அறிந்திருக்கவில்லை.மறுநாள் அவர்கள் அனைவரும் மாஸ்கோ அனுப்பி வைக்கப்பட்டனர்.சோவியத் தொலைக்காட்சிகளில் விபத்து பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை.இறுதியாக பிரிபியாட் நகரில் இருந்து வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மூன்று நாட்களுக்கு பின்னர் மறுபடியும் ந‍கருக்குள் வரலாம் என கூறப்பட்டது.

Radioactive rain

      சுவீடன் அணுக்கழிவு சேமிப்புமைய ஊழியர் காற்றில் அதிகப்படியான கதிர்வீச்சு கலந்துள்ளதை உணர்ந்தார்.சோவியத் உண்மையை வெளிஉலகுக்கு கூறாமல் மறைத்தது.அமெரிக்க செயற்கைக்கோள்கள் துல்லியமாக செர்ணோபிலை படம்பிடித்தன.Reactor No 4-லிருந்து வெளியான விஷவாயுக்கள் மேகங்களில் ஊடுருவியது.அமிலமழை உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.பின்னர் சோவியத்தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகியது.சோவியத் விஞ்ஞானிகள் Nuclear fission நிகழ்வைத்தடுக்கப்போராடிக்கொண்டிருந்தனர்.போரான்,மணல் முதலான துகள்களைக்கொண்டு நிரப்பி Nuclear fission நடைபெறுவதை குறைத்துக்கொண்டிருந்தனர்.ஆனால் அது நிரந்தரத்தீர்வாக அமையவில்லை.

The China Syndrome

       The China Syndrome என்பது ஹாலிவுட் திரைப்படமாகும்.கலிபோர்னியாவில் நடைபெற்ற அணுவிபத்தில் உருவான அணுக்கழிவுகள் பூமியின் மற்றொரு பகுதியான China-வில் வெளிப்பட்டது.செர்ணோபில் விபத்தில் அணுக்கழிவுகள் பிரிபியாட் நதியில் கலந்து கருங்கடலில் கலக்கும் அபாயம் இருந்தது.மேலும் மற்ற அணு உலைகளும் உடையும் அபாயம் ஏற்பட்டது.சுரங்கத்தொழிளாளர்கள் அதைத்தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

Hospital No 6

    செர்னோபில் விபத்தைப்பற்றி உணராத மாஸ்கோவாசிகள் மே தினசிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாடி கொண்டிருந்தனர்.விபத்தில் இருவர் உயிர் இழந்தனர்.மற்றவர்கள் குடும்பத்தினர் மருத்துவமனை விரைந்தனர்.நியூயார்க் நகரைச்சார்ந்த மருத்துவரான Gale விபத்தை ஊடகங்களின் வழியே அறிந்தார்.அவர் ரேடியேசன் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருத்துவமுறைகளை பற்றி நன்கு அறிந்திருந்தார்.தனது சோவியத் நண்பர் Hammer உதவியுடன் மிக்கேல் கோர்பசேவைத்தொடர்புக்கொண்டு நோயைத்தீர்ப்பதற்கான Blood Transplant சிகிட்சையை மேற்கொள்வதற்கான அனுமதிப்பெற்றார்.பின்னர் நோயாளிகளுக்கு சிகிட்சை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் நான்கில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.நோயாளிகளின் குடும்பத்தினர் தீவிரசிகிட்சை நிலையில் இருக்கும் நோயாளிகளிடம் பேச அனுமதிக்கப்படவில்லை.அதிகாரிகள் நோயாளிகளை விசாரணைக்கு அனுகியப்பொழுது மருத்துவர்கள் இறந்துக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் விசாரிப்பது முறையானது இல்லை என அவர்களைத்தடுத்துவிட்டனர்.

The liquidator
            
    Civilian Nuclear Industry ரேடியேஷனால் பாதிக்கப்பட்ட பொருட்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.400 சுரங்கத்தொழிலாளர்கள் காமாக்கதிர்வீச்சுக்கு மத்தியிலும் வேலை செய்து நிகழும் பேராபத்தினை தங்களால் இயன்ற அளவு தடுத்தனர்.
    இறுதியாக சோவியத் அரசாங்கம் செர்னோபில் அணு உலையைக்கைவிட்டது.சோவியத் 120கிமீ தொலைவிற்கு உணவு,மீன்பிடித்தல் முதலானவற்றை தடை செய்தது.கீவ் நகரத்திலிருந்த குழந்தைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள் சுட்டுக்கொல்லப்பட்டன.பெலாரஸ் பகுதியில் நிலங்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன.
     
    பிரிபியாட் நகரவாசிகள் மறுபடியும் ந‍கருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.மிக அத்தியாவசமானப் பொருட்கள் மட்டும் எடுக்கக் கால‍அவகாசம் கொடுக்கப்பட்டது.சோவியத் நிலவிற்கு அனுப்பிய ரோவர் உதவியுடன் இடிபாடுகள் சரிசெய்யப்பட்டன.சரிசெய்யப்படாத இடிபாடுகள் மனித உதவியுடன் அப்பறப்படுத்தப்பட்டன.

                RBMK Reactor-ல் உள்ள பிரச்சனைகனைகளை அறிந்த அரசு அவ்வகை Reactor-களைத்தடை செய்தது.Valery Legasov  1rst deputy director of the Kurchatov Institute செர்னோபில் நடவடிக்கைகளில் பங்கேற்றவர்.அவரும் ரேடியேசனால் பாதிக்கப்பட்டிருந்தார்.வியன்னா மாநாட்டில் மனிதகவனக்குறைவால் நடந்தத்தவறு என நிருபித்தார்.பின்னர் தனது சகாக்களிடம் தான் பொய் கூறவில்லை அதே நேரம் முழு உண்மையையும் கூறவில்லை எனக்கூறினார்.

                கடுமையான ரேடியேசனால் பாதிக்கப்பட்ட அவர் சில வருடங்களுக்குப்பின்னர் தற்கொலை செய்து இறந்தார்.இறப்பதற்கு முன்னர்  உண்மைகளை    ஆடியோவாக சேமித்தார்.

    Viktor Bryukhanov,Nikolai Fomin,Anatoly Dyatlov மூவருக்கும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.Viktor தனது சிறைதண்டனையைத்தவிர்ப்பதற்காக ஆதாரங்களை தேடியப்பொழுது சில தொழில்நுட்ப கோளாறு தொடர்பான ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன.Nikolai Fomin மன‍அதிர்ச்சிக்கு உள்ளானர்.அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை.சிறைகாலம் முடிந்த பின்பு மற்றொரு அணுமின்நிலையத்தில் பணிக்கு சென்றார்.Bryukhanov தனது நன்னடத்தையின் காரணமாக சில வருடங்களில் விடுவிக்கப்பட்டார்.Dyatlov ரேடியேஷனால் பாதிக்கப்பட்டதனால் சில வருடங்களில் விடுவிக்கப்பட்டார்.
                    
                    Toptunov,Akimov ஆகியோரைக்குறிப்பிட்டு குற்றவாளிகள் இறந்ததினால் மரணத்தண்டனையிலிருந்து தப்பினர் எனக்குறிப்பிட்டிருந்தனர்.இதை Toptunov-ன் பெற்றோர் கவலையுடன் பதிவு செய்தனர்.Alexander Yuvchenko சிகிட்சைக்குப்பின்னர் குணமடைந்தார்.2008-ம் ஆண்டு பக்கவிளைவுகளால் மரணமடைந்தார்.
    
                                                                        
               சோவியத் அணு உலைப்பாதுகாப்பிலிருந்து உலகைக் காக்க 128 பில்லியன் ரூபிள் செலவுறசெய்தது.பின்னர் சோவியத்தில் பலப்போராட்டங்கள் வெடித்தன.இறுதியாக சில வருடங்களில் சோவியத்யூனியன் உடைந்தது.பல நாடுகள் அணுஉலைகளைக்கைவிட்டன.பிரிபியாட் நகரம் முழுவதுமாகக் கைவிடப்பட்டு கதீர் வீச்சினால் உருமாறிய உயிரினங்கள் மட்டும் அங்கு வாழ்கின்றன.செர்னோபில் அணு உலையில் சிலர் வேலை செய்கின்றனர்.இறந்துப்போன ஒருவரது உடல் எடுக்கப்படாமல் இருந்தது அங்கயே அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.                                                                                       




Comments