இந்த குறிப்புகள் ஹிமாலயன் பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர்.
துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இந்தியாவை நோக்கி முன்னேறின.
இந்தோ-சீனா போருக்கு முன்னதாக இந்தியா சீனாவிடம் போர் புரியும் என எதிர்பார்க்கவில்லை.சீனாவின் படையெடுப்பை இந்தியாவால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை சகித்து கொள்ளவும் முடியவில்லை.அப்பொழுது நாட்டின் உயர்பதவியில் இருந்தவரான குடியரசுதலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் நாம் எளிதில் எவரையும் நம்புவராகவும் கவனக்குறைவானவர்களாகவும் இருந்துவிட்டோம் எனக்கூறினார்.பிரதம மந்திரி நேரு சீனா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டதாகக்கூறினார்.இந்தியப்பாதுகாப்பு துறை அமைச்சரான கிருஷ்ணமேனன் போதுமான ஆயுதங்கள் நம்மிடம் இல்லை எனக்கூறினார்.இந்திய அரசாங்கம் அஸாம் டேஸ்பூர் பகுதி மக்களை இடமாற்றம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.இந்திய அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பாகாது என அறிவித்தது.இந்திய டெபுடி கமிஷனர் இந்தியா சம்பந்தமான கோப்புகள் பணநோட்டுகள் முதலானவற்றை எரித்தார்.ஆனால் அஸாம் மக்கள் போருக்கோ அதன் பின்விளைவுகளுக்கோ தயார் ஆகவில்லை.நேரு முதன்முதலாக இந்தியமக்கள் முன்னிலையில் தலைகுனிந்தார்.
அக்டோபர் 7 1950-ல் சீன இராணுவம் திபெத்திற்குள் நுழைந்தது.திபெத் இந்தியாவிடம் உதவி எதிர்பார்த்தது.ஆனால் இந்தியா அதற்கு மறுத்து விட்டது.சீனாவுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது.திபெத் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடைப்பட்ட பகுதி திபெத்தை இந்தியா கைப்பற்றியப்பொழுது அது இந்தியாவிற்கு அச்சுறுத்தலானதாக அமையும் என வல்லபாய்படேல் உட்பட பல தலைவர்கள் நேருவிடம் வலியுறுத்தினர்.ஆனால் அச்சுறுத்தல் வரும் வரையிலும் படேல் உயிரோடு இல்லை.அவர்களது வலியுறுத்தலை நேரு பெரிதாகக்கண்டு கொள்ளவில்லை.ஆனால் அந்த அச்சுறுத்தல் இந்தியா சுதந்திரம் அடைந்து 15 வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்தது.
டால்வி 1950-ம் வருடம் தென் இந்தியாவில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பொழுது சீனா திபெத்திற்குள் நுழைந்து விட்டதை அறிந்தார்.அப்பொழுதே ஜெனரல் W.D.ALentaigne இந்தியாவின் பின்பக்கக்கதவு திறந்து விட்டது ஹிமாலயா சீனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.நாம் நமது உள்கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும்.கடற்படையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.அவர் போருக்கு முன்பே அங்கிருந்த சில மாணவர்கள் தாங்கள் பனி ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே சீனாவுடன் போரிடுவார்கள் என்பதை கணித்தார்அவர் கூறியதைப்போலவே 1962-ம் வருடம் Lt.Col பஜ்ஜி மேத்தா கொலைசெய்யப்பட்டார்.டால்வி சிறைபிடிக்கப்பட்டார்.
டிசம்பர் 1950-ல் வல்லபாய்படேல் இறந்து விட்டார்.ஆனால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே நேருவிற்கு நடப்பதை முன்கூட்டியே கணித்து கடிதம் எழுதினார்.
1951-ம் வருடம் சீனா திபெத்தின் லாசாவிற்குள் அமைதியான முறையில் நுழைந்தது.தொடக்கக்காலக்கட்டத்தில் அங்கு சாலைகளையும் ,விமானபாதைகளையும் உருவாக்கினர்.1953-ல் அனைத்து நகரங்களும் டெலிகிராப்பால் இணைக்கப்பட்டன.1954-ல் இரண்டு முக்கியநகரங்களின் சாலைகளை திபெத்துடன் இணைத்தது.அந்தசாலைகள் இராணுவ உபயோகத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன.இந்தக்காலக்கட்டத்தில் சீனாவிற்கு இந்தியாவின் உதவி தேவைப்பட்டதால் அது இந்தியாவின் விவகாரத்தில் தலையிடவில்லை.மேலும் இந்தியாவுடன் நட்பு பாராட்டியது.இந்தி-சீனி பாய் பாய் எனக்கூறப்பட்ட காலக்கட்டம் அது.அக்காலக்கட்டத்தில் பஞ்சசீலக்கொள்கையும் கையாளப்பட்டது.
பஞ்சசீலக்கொள்கையின் மை காய்வதற்கு முன்னதாகவே சீனா உத்தரபிரதேஷம் மற்றும் திபெத்திய எல்லை சீன எல்லைக்கு உட்பட்டது என வாதிட்டது.1954-ம் வருடம் நேரு சீனாவிற்கு செல்லும்பொழுது அவருக்கு நல்லவிதமான வரவேற்பு வழங்கப்பட்டது.நேரு சீனாவுடன் போர் ஏற்படாது என உறுதியாக நம்பினார்.ஒருவேளை அவர் மூளை சலவை செய்யப்பட்டிருக்கலாம்.
1952-ல் ஜெனரல் குல்வந்தர் சிங் வடகிழக்கு பகுதிகளின் நிலைமையை ஆராய்ந்து சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பிரச்சனையைக்குறித்து நீண்டதொரு அறிக்கையை தயார் செய்தார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்திய அரசாங்கம் அதைப்பெரிதாகக்கண்டுகொள்ளவில்லை.
1954-55 ஆகிய வருடங்களில் ஆகாஷிஜின் பகுதியில் சீனா சாலைகளை உருவாக்கியது.இந்தியராணுவம் மேற்பார்வையிட சென்ற பொழுது அவர்களில் ஒருவரை சீனராணுவத்தினர் சிறைபடுத்தினர்.நேரு இந்த விஷயத்தை பற்றி பார்லிமெண்டில் பேசவில்லை.சரியான தருணம் வரும்பொழுது கூறிகொள்ளலாம் எனக்கூறினார்.
1955-ல் குருசேவ்வின் வருகைக்கு பிறகு இந்திய-ரஷ்ய உறவு நல்லநிலையில் இருந்தது.ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி காஷ்மீர் விவகாரத்தில் உதவியது.ஆனால் சீனா ரஷ்யாவின்கூட்டாளி என்ற காரணத்தினால் ரஷ்யா மற்றும் இதர கம்யூனிஸ்டு நாடுகளிடம் இருந்து பெரிய அளவில் உதவி எதிர்பார்க்கமுடியவில்லை.
ஏப்ரல் 3 நேரு தலாய்லாமா இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டார் என்பதை அறிவித்தார்.நேரு சீனாவுடன் நட்பு தொடரும் என அறிவித்தார் அதே நேரம் திபெத்திய மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டார்.தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தது சீனாவின் கண்களுக்கு உறுத்தலாக தெரிந்தது.இதில் கவனிக்கதகுந்த விஷயம் என்னவெனில் புத்தநாடுகளான பர்மாவும் ,இலங்கையும் கூட தலாய்லாமாவை ஏற்று கொள்ளவில்லை.
சீனா இந்தியாவிற்கு பாடம் கற்பிக்க நினைத்து இந்தியாவின் மீது போர் தொடுத்தது.நேரு இந்த விஷயத்தை பார்லிமெண்டில் கூறினார்.மேலும் ஆக்ஷிஜின்னில் இந்திய எல்லைக்குள் சீனீ சாலைகளை உருவாக்கிய விஷயத்தை முதன்முதலாக ஒப்புகொண்டார்.சீனா மக்மோகன் எல்லைக்கோட்டை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
சீனதாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் 10 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.இக்காலக்கட்டத்தில் இந்திய ஜெனரல் திம்மையாவிற்கும் பாதுகாப்பு மந்திரி மேனனுக்கும் இடையே மோதல் உருவானது.சீன இந்திய எல்லை பிரச்சனையானது இந்தியாவில் திம்மையாவுக்கும் மேனனுக்கும் இடையிலான பிரச்சனையாக மாறியது.ஜெனரல் திம்மையா டிம்மி என அழைக்கப்பட்டார்.இரண்டாம் உலகப்போரின் போது கமெண்டராக ஈடுபட்டவர்.வட இந்தியப்படைவீரர்கள் அவரை மிகவும் விரும்பினர்.
1947-ல் பஞ்சாப் எல்லையில் பணிபுரிந்தார் இந்தியப்பிரிவினை நடந்தக்காலக்கட்டம் அது.மிகவும் சாதுரியமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டார்.டால்வியினது 25 வருட பணிக்காலத்தில் ஒருவர் கூட அவரை தவறாக பேசியது கிடையாது.ஆனால் இப்போர்காலக்கட்டத்தில் தனது பணியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.இது வருந்தத்தக்க நிகழ்வாகும்.ஜெனரல் திம்மையா தனது பணியை செய்திருந்தால் இந்தியா சர்வதேச அளவிலான அவமானத்தில் இருந்து தப்பித்திருக்கும்.
B.M கால் என்பவர் மேஜர் ஜெனரல் பொறுப்பிலிருந்து லெப்டினெனட் ஜெனரல் பொறுப்பிற்கு மாற்றப்பட்டார்.இந்தக்காலக்கட்டத்தில் மேனன் திம்மையாவை எதிர்த்துக்கொண்டிருந்தார்.இப்பொழுது மேனன் கால் காலக்கட்டம் தொடங்கியது.1961-ல் திம்மையா பதவி விலகும் பொழுது இந்திய ராணுவம் தனது கடைசி நம்பிக்கையையும் இழந்தது.
மக்மோகன் எல்லைக்கோட்டிலிருந்து 360 மைல் தொலைவிற்கு நமதுநாட்டில் எவ்விதமான போக்குவரத்து வசதியுமில்லை நல்லவிதமான உள்கட்டமைப்புகளும் இல்லை.முதலில் கூர்க்கா படையினர் டோவாங் பகுதியில் நுழைந்தனர்.அவர்களுக்கு சப்பாத்தி உணவாக வழங்கப்பட்டது.
துருப்புகளுக்கு இருப்பிடம் அமைப்பது மிகப்பெரிய சிக்கலாக மாறியது.கமெண்டர் ரன்பீர் சிங் திறமையான ராஜபுத்திரர்.அந்த மோசமான தருணத்தை கையாண்டு கொண்டிருந்தார்.1960 காலக்கட்டத்தில் சீனர்கள் NEFA விற்கு எதிரில் சாலைகளை அமைத்தனர்.
அக்காலக்கட்டத்தில் நமதுநாட்டு அரசியல்வாதிகளுக்கு இராணுவ வரலாறு பற்றி எதுவும் தெரியாது.இந்த உலகத்திலேயே இந்திய அரசியல்வாதிகள் மட்டும் தான் உலகிலேயே போர் என்னவென்பதை பற்றி ஒன்றும் அறியாதவர்கள் ஆவர்.
இந்திய எல்லைக்குள் விலங்குகளைக்கொண்டு போக்குவரத்து செய்வது என்பது கூட இயல்பானதாக இல்லை.ஆனால் சீன எல்லைக்குள் சாலைப்போக்குவரத்து வசதி மிகவும் உயர்வானதாக இருந்தது.இந்த போர் தற்கொலைக்கு சமமான ஒன்றாகும்.அந்த நேரத்தில்தான் மேனன் வானூர்திகளை இணைப்பதற்கும் வாங்குவதற்கும் முடிவே செய்திருந்தார்.
சீன மற்றும் இந்திய பிரீமியர்கள் தங்களுக்கிடையேயான சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.அரசால் அந்நியப்படையெடுப்பை தடுக்கமுடியவில்லை.கம்பிளி ஆடைகள் கூட போர்வீரர்களிடம் இல்லை.யாரும் துப்பாக்கி இல்லை இயந்திர துப்பாக்கி இல்லை என்பன போன்ற கேள்விகளை கேட்கவில்லை.வானூர்திகள் கூட குறைந்த அளவிலேயே நம்மிடம் இருந்தன.
அதிகக்குளிரின் காரணமாக அதிகளவில் மண்ணெண்ணெய் மற்றும் எண்ணெய் அடுப்புகள் உபயோகிக்கப்பட்டன.பின்னர் சிறிதளவு ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது.சாப்பாடு குறைந்த அளவானதாகவும் சுவையற்றதாகவும் இருந்தது.மலையுச்சியில் ஜவான்களின் பிரதான உணவான பருப்பு வகைகளை சமைக்க முடியவில்லை.
போர்வீரர்களுக்கு உகந்த மருத்துவ உதவி கூட கிடைக்கவில்லை.காயமடைந்தவர்களை தாழ்வாரத்தில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுமதித்தனர்.ஆனால் அதுவும் எளிதானதாக அமையவில்லை.ஒரு படைக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார்.
இந்தியவிமானப்படை லடாக்கின் தட்பவெப்பநிலைக்கு ஏற்பப்பயிற்சி மேற்கொள்ளவில்லை.ஜெனரல் கால் போர்வீரர்களுக்கிடையேயான சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டார்.அவர் யாருடைய வயிற்றெரிச்சலையும் கேட்க விரும்பவில்லை.பல மைல்தூரம் கடந்து அந்த போர்வீரர்களுடனான சந்திப்பிற்கு வந்திருந்தார்.
ஜெனரல் வர்மா விமானதளங்கள் அமைக்கவும் கட்டிடங்களை கட்டவும் உதவி கோரினார்.இந்நேரத்தில் நேரு நிலைமை நமக்கு சாதகமாக உள்ளது என பொதுமக்களுக்கு தவறான நெறிமுறைகளை வழங்கினார்.நேரு லோக்சபாவில் லடாக்கில் உள்ள நமது படைகள் சீனாவை எதிர்ப்பதற்கு தயார்நிலையில் உள்ளது.இதை வர்மா மாதிரியான ஜெனரல்கள் நேரு தவறான பாதையில் நம்மை வழிநடத்துவதாகக்கூறினர்.
வர்மா தொடர்ந்து நமது பலவீனங்களை குறைபாடுகளைக்கூறிக்கொண்டிருந்தார்.நேருவின் தவறான கருத்துகளை அவர் மறுத்தார்.24 மணிநேரத்திற்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்தார்.இறுதியாக அவர் தனது அன்புக்குரிய நாட்டை விட்டு இங்கிலாந்து சென்றுவிட்டார்.
ஜெனரல் கால் காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவை கைது செய்ய நேருவால் அனுப்பப்பட்டவர்.பின்னர் இந்திய சீனக்கொள்கையில் முக்கியப்பங்கு வகித்தார்.Mr. Welles Hangen ன் கூற்றுபடி அவரது பள்ளி நண்பரான கால் தன்னை இந்தியாவின் பிரதம மந்திரியாக நினைத்துக்கொண்டிருந்தார்.
கால் இரண்டாம் உலகப்போரின் பொழுது சாதாரண அதிகாரியாக செயல்பட்டார்.கடந்த ஆறு வருடமாக தனது பணிக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.இராணுவத்தின் எல்லா பிரிவுகளும் இந்த போரில் முக்கியப்பங்காற்றின.கால் ஒரு சாதாரண அதிகாரி ஆனால் அவர் மிகவும் மெச்சதக்கவர் இல்லை.கால் சுத்தமான அறிவுள்ளவராக இருந்தார்.தன்னுடைய வேலையில் முழுஈடுபாடு உடையவராகவும் இருந்தார்.அவர் அரசியல் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அல்ல.
பிரதம மந்திரி நேருதான் காலை தேர்வு செய்தார். பிரதமர் நேரு விவசாயநாடான இந்தியாவில் கடவுளாகப்பார்க்கப்பட்டார்.யாரும் அவருடைய செய்கையை எதிர்த்து கேள்வி எழுப்பமாட்டர்.வரலாற்றிலேயே ஒரு சில மனிதர்களுக்குதான் இந்த மாதிரியான அதிகாரம் இருக்கும்.ஆனால் நேரு ஒருவர் தான் இந்தத்தவறான அணுகுமுறைகளுக்கு முதல்காரணம்.
இந்தியராணுவத்தின் பலதரப்பட்ட உபகரணங்கள் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டவை ஆகும்.உபகரணங்கள் மற்றும் வெடிகுண்டுகள் முதலானவை குறைந்த அளவிலேயை இருந்தன.அடிப்படைத்தேவைக்கானப்பொருட்களும் குறைந்த அளவிலேயே இருந்தன.அதைவிடவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் நம்மிடம் நவீனரகத்துப்பாக்கிகளும் இல்லை,போர்விமானங்களும் இல்லை மற்றும் எவ்வாறு அணுகுண்டு தயாரிப்போம் என்பது மாதிரியான அனுபவமும் இல்லை.
பிண்டோ என்பவர் திறமையான அதிகாரி.1963-ல் விமான விபத்தில் உயிரிழந்தார்.அவருடைய இறப்பு இந்தியராணுவத்திற்கு மிகப்பெரிய நஷ்டமாக அமைந்தது.அவர் புத்திமான் மற்றும் திறமைசாலி.
ரங்கியா பகுதியில் இருந்த இராணுவவீரர்களுக்கு ஓய்வு அறைகளோ உண்பது மற்றும் குளிப்பதற்கான அறைகளோ அமையவில்லை.1962-ஆம் ஆண்டிற்கு பிறகு ஜெனரல் சௌத்ரி மற்றும் ஜெனரல் பயின்டல் உணவகங்கள் மற்றும் குளிப்பதற்கான அறைகளை அமைத்தனர்.
டால்வி தன்னுடன் கல்லூரியில் படித்தவரான பஜ்ஜி மேத்தாவை அங்கு சந்தித்தார்.அவர் மூன்றாவது படையணியில் முக்கியப்பங்கு வகித்தார்.அவர்கள் டோவாங் பகுதியில் தங்கியிருந்தனர்.அங்குள்ள சூழ்நிலைக்கு ஒவ்வாத மூங்கில் வீடுகளில் அவர்கள் தங்கியிருந்தனர்.ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அந்த அமைதியான நேரத்தில் மருத்துவவசதி மட்டும் மேற்கொள்ளப்பட்டது.
ஓரிடத்திலிருந்து நகருவதற்கு போர்டர் மற்றும் குதிரைகள் ஆகியன உபயோகிக்கப்பட்டன.ராணுவமருத்துவமனை வீரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் பயன்பட்டது.இதுவரை நவீன மருத்துவத்தைப்பார்க்காத மக்கள் அம்மருத்துவமனையால் மகிழ்ச்சியுற்றனர்.
டோவாங் பகுதி எட்டு கிராமங்களால் சூழப்பட்டுள்ளது.அந்த பகுதி ஆசிரமங்களால் சூழப்பட்டிருந்தது.அங்கு அதிகளவிலான துறவிகள் இருந்தனர்.அவர்கள் இராணுவத்தினரைக்கண்டு அச்சம் கொள்ளவில்லை.எளிமையாக விருந்தோம்பினர்.டால்வி தனது 25 வருட பணிக்காலத்தில் உலகின் வேறு எந்தப்பகுதியிலும் அப்படியொரு மகிழ்ச்சியை அடைந்ததில்லை.நாம் அவர்களை பிற்படுத்தப்பட்டப்பழங்குடியினர் என்கிறோம்.ஆனால் அவர்கள்தான் நல்ல பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் போதிக்கின்றனர்.
அவர் கெம்போ என அழைக்கப்பட்ட தலைமை லாமாவை சந்தித்தார்.லாமா அவரை தன்னுடைய நண்பராக ஏற்றுக்கொணடார்.அவர் டால்வியினது குடியிருப்புக்கு சென்று அவர் தீயசக்திகளின் தொந்தரவில் இருந்து விடுபட ஆசிர்வதித்தார்.
டோவாங் ஆறாவது தலாய்லாமா பிறந்த ஊர்.அங்கு புத்தகங்களோ,செய்திதாளோ கிடையாது.டால்வி சீன விவகாரத்தில தனது கவனத்தை செலுத்தினார்.சாலைப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்துக்கொண்டிருந்தது.மிகவும் முனைப்பாக சீனாவுக்கு எதிரானப்போரில் இந்தியா மும்முரம் காட்டியது.
8 செப்டம்பர் 1962-ல் சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்தது.மோசமான தொலைத்தொடர்பினால் அஸாம் ரிவில்ஸால் எளிதாக உதவமுடியவில்லை.ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் படைவீரர்களுக்கு அதிகளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.வீரர்களுக்கு தேவையான உணவுவசதி,போக்குவரத்து வசதி கிடைக்கவில்லை.7 பிரிகேடை சார்ந்த வீரர்கள் எல்லைகளுக்கு பொறுப்பானவர்கள் ஆவர்.
அக்காலக்கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியான கென்னடியின் சார்பாக செஸ்டர் பவுல்ஸ் காலை சந்தித்தார்.சீனப்படையெடுப்பைப்பற்றி கேட்டறிந்தார்.அதற்கு கால் சீனர்கள் லடாக் முதலானப்பகுதிகளில் தங்கள் படைகளை நிறுத்தியிருந்தனர் எனக்கூறினார்.மேலும் அவர் கூறுகையில் சீனர்கள் வெயில் மற்றும் இலையுதிர் காலக்கட்டத்தில் இந்தியாவிற்கு அதிகளவில் தொல்லைகள் தருவர் எனக்கூறினர்.
இந்த போரில் இந்திய ராணுவம் மோசமான பங்களிப்பை அளித்தது.சீன இராணுவம் 1950-1962 ஆகியக்காலக்கட்டத்திலேயே போருக்கு தயாராகிக்கொண்டிருந்தது.இந்தியா போருக்கும் தயாராகவில்லை அமைதிப்பேச்சுவார்த்தைக்கும் தயாராகவில்லை.இது சீனாவிற்கு மிகவும் சாதகமாக அமைந்தது.லடாக் எல்லை சீனாவிற்கு மிக முக்கியமானதாக இருந்தது.சீனா லடாக் எல்லையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.ராணுவம் சீனாவை இந்திய எல்லைக்குள் இருந்து விரட்டுவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
ஆகஸ்ட் 1962-ல் முக்கியமான சண்டை பாங்காங் ஏரிப்பகுதியில் நடைபெற்றது.சீனா முன்னதாகவே 12000 சதுரகிலோமீட்டர் அளவுள்ள பகுதியைக்கைப்பற்றியது.மேலும் 2000 சதுரகிலோமீட்டர பகுதியைக்கைப்பற்றியது.1962-ம் வருடம் போர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் முடிவுக்கட்டத்தை எட்டியது.அதாவது ரஷ்யபிரீமியர் குருசேவ் சீன மந்திரி மார்ஷல் சென் யி மற்றும் மேனனுடன் சீன இந்திய எல்லை பற்றிய விவாதத்தை நடத்தினார்.
இந்தத்தேவையில்லாத இராணுவ விரயத்தினால் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் தான் பயன் என அவர் குறிப்பிட்டார்.மார்ஷல் சீனா அமைதி உடன்படிக்கைக்கு உட்படுவதாகக்கூறினார்.மேனனும் இந்த பொன்னான வாய்ப்பைப்பயன்படுத்திக்கொண்டார்.சீனா லடாக்கில் உள்ள கல்வானையும் கைப்பற்ற முனைந்துக்கொண்டிருந்தது.கூர்க்காக்களை நேபாளிகள் அவர்கள் இந்தியர்களுக்கு உதவக்கூடாது என்பது போன்று சீனா செயல்பட்டுக்கொண்டிருந்தது.
கல்வான் 1959-ற்கு பிறகு தலாய்லாமாவின் மடமாக விளங்கியது.இந்த போர் தானாக நடந்ததும் அல்ல .அதே நேரத்தில் நாம் எதிர்பார்த்ததும் இல்லை.நாம் அணிசேரா கொள்கையில் இருந்ததால் நமக்கு கூட்டாளிகளும் இல்லை,கூட்டாளிகளின் முக்கியத்துவத்தைக்குறித்து சீனா நமக்கு நல்லதொரு பாடம் கற்பித்தது.
போஸ்ட் கமெண்டர் தொலைபேசி வழியாக அனுப்பிய செய்தியில் 600 க்கு மேற்பட்ட சீனவீரர்கள் டோக்லா எல்லையைக்கடந்து இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டனர்.உடனடியாக அஸாம் ரிவில்ஸ்க்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.
சீனப்படையெடுப்பு 8 செப்டம்பரில் தொடங்கி 20 அக்டோபரில் முடிவுற்றது.அக்டோபர் 2 ல் நேரு வெளிநாட்டில் இருந்து திரும்பினார்.ஜெனரல் கால் தனது பொறுப்பில் மிகவும் முன்னேறியிருந்தார்.போரில் முன்னேறி செல்வதற்காக பாரசூட்களை உபயோகித்த பொழுது அவை உபயோகமற்றதாக இருந்தது.உயரமானப்பகுதிகளில் போர்வீரர்களுக்கு சுவாசவசதியை ஏற்படுத்த போதுமானப்போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை.ராணுவம் கடினமான மூங்கில் காடுகளைக்கடக்க வேண்டியிருந்தது.
முன்களப்பணியாளர்களிடம் 4 நாட்களுக்கு மட்டும் தேவையான ரேஷன் மற்றும் குளிர்ஆடைகள் இருந்தன.நமக்சூ ஆற்றின் இருபுறமும் சீனவீரர்கள் குவிக்கப்பட்டனர்.அங்கிருந்த வீரர்கள் ஹிந்தியில் இந்தியா மற்றும் சீனா நண்பர்கள் எல்லை விவகாரத்தில் நமக்குள் பிரிவு வேண்டாம் சீன எல்லையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.
இந்தமாதிரியான தருணத்தில் நேரு,தேசாய் மற்றும் மேனன் முதலான தலைவர்கள் வெளிநாடு சென்றுவிட்டனர்.சுபேதார் பிரதாப் சிங் தனது 28 வருட சேவையை முடிவு செய்திருந்தார்.இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டவர்.அவர் தானாகவே ராணுவத்தில் மறுபடியும் இணைந்திருந்தார்.பின்னர் போரில் கொல்லப்பட்டார்.
இராணுவத்தினர் டீ யில் சர்க்கரைக்குப்பதிலாக உப்பை உபயோகித்தனர்.வடஇந்தியர்கள் மாவைதான் விரும்புவார்கள் ஆனால் அவர்கள் அரிசி உட்கொண்டனர்.காரணம் இராணுவ உபகரணங்களுடன் தவா மாதிரியான சமையல் உபகரணங்களை தவிர்த்தால் சுமைகளை சிறிதளவு குறைக்கலாம் என்பதால்.
டோலா பகுதி சீனவீரர்கள் நுழைவதற்கு ஏதுவானதாக இல்லை.டாக்லாவின் வடக்கு சரிவுகள் நமக்சூ பள்ளதாக்குகளை விட குறைந்த அளவு காடுகளைக்கொண்டிருந்தன. செப்டம்பர் 20 நமக்சூவில் சண்டை ஆரம்பித்ததும் இரண்டு சீனவீரர்கள் கொல்லப்பட்டனர்.இரண்டு பேர் காயம் அடைந்தனர்.மேலும் நமது இராணுவத்தினர் ஐவர் காயம் அடைந்தனர்.
ஜெனரல் காலோ நமது 7பிரிகேட் இராணுவத்தினை சார்ந்த வீரர்களோ சீனப்படைகளை விட சிறந்தவர்கள் எனக்கூறிக்கொள்ளமுடியாது.10 செப்டம்பரில் செங்கே பகுதியில் ஏறிய வீரர்கள் இரத்தவாந்திக்கும் காய்ச்சலுக்கும் உள்ளாயினர்.டோவாங்கில் இருந்து லும்புப்பகுதிக்கு இராணுவத்தினர் செல்ல 15 நாட்கள் ஆகியது.
அரசாங்கம் எப்படியாவது சீனர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.உலகின் ஏளனத்திற்கு நாம் உள்ளாகியிருந்தோம்.ஆனால் இந்தியா உலகிடம் நாம் சீனர்களை விரட்டியடிப்போம் எனக்கூறியது.
ஜெனரல் கால் டேஸ்பூருக்கு 4 அக்டோபர் மாதம் விரைந்தார்.ஜெனரல் சென் காலை பெரியளவில் வரவேற்கவில்லை.சென் பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் நடந்த சந்திப்பில் இந்தியராணுவம் எந்த எல்லைப்பகுதிகளில் நிற்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
5 அக்டோபர் மாதத்தில் சீனா தன்னுடைய திட்டமிடப்பட்ட அணுகுமுறைகளாலும் முறைப்படுத்தப்பட்ட சாலை ஒருங்கிணைப்பாலும் டாக்லா பகுதியை எளிதில் கைப்பற்றியது.நேரு சீனர்கள் நமக்கு எதிரான செய்கையில் ஈடுபடமாட்டார்கள் என நேரு அளித்த உறுதியின் காரணமாக கால் நமக்சூவை விரைந்தார்.ஆனால் அவர் அது ஒரு விரைவானப்பேரழிவு மற்றும் பழிவாங்கலாக மாறும் என அவர் சிறிதும் நினைக்கவில்லை.
டால்வியின் படைபிரிவினர் டோலா செல்வதற்காக லும்புவைக்கைவிட்டனர்.இராணுவவீரர்கள் முன்னோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.பின்னர் லும்புவில் இருந்து இருமைல் தொலைவில் கூடாரம் அமைத்து இருந்தனர்.
5 அக்டோபர் 1962 டாக்லா விவகாரத்தில் மோசமான நாளாகும்.கால் யாருடனும் விவாதிக்காமல் துணைஇராணுவத்தை முன்னோக்கி நகர்த்தினார்.இராணுவத்தினர் டிசாங் பகுதியில் நுழைய மறுத்தனர்.கால் அவர்களை முன்னோக்கி நகர வற்புறுத்தினார்.7 பிரிகேட் நமக்சூவை நோக்கி நகர்ந்தது.7பிரிகேட்டை சார்ந்தவர்களுக்கு போதுமான குளிர் ஆடைகள் இல்லை,மூன்று நாட்களுக்கு மட்டும் தேவையான ரேஷன் பொருட்கள் இருந்தன.துப்பாக்கிக்குண்டுகள் இல்லை.டிஷாங்டரில் கடைகள் எதுவும் இல்லை.தினமும் கடுமையான இழப்புகளை சந்தித்துக்கொண்டிருந்தோம்.
திறமையான சீனராணுவத்துடன் மோதுவதற்கு தேவையான திறமையோ,தலைமையோ நம்மிடம் இல்லை.சீன பிரிகேட் அவர்கள் வலைக்குள் நாம் விழுவோம் என அமைதியாகக்காத்துக்கொண்டிருந்தனர்.கார்பலோ-1 வழிப்பாதை பயணம் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது.கால் சீனர்களை வெளியேற்றுவதற்கான ஒவ்வொரு வழியையும் கைவிட்டுக்கொண்டிருந்தார்.
நிறைய இராணுவத்தினர் டிசாங்கில் இறந்தனர்.சிலர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.ஆனாலும் கால் தனது கட்டளைகளால் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்து கொள்ளவில்லை.டிஷாங்கரில் இரவு நேரத்தை செலவழித்த பிறகு டோலா போஸ்டை நோக்கி விரைந்தனர்.
காலின் ஆணைப்படி ராஜ்புத்தும் கூர்க்காக்களும் லும்புவிலிருந்து டோலாவிற்கு இடம்மாறினர்.வரலாற்றில் முதல்முறையாக அக்டோபர் 10 1962-ல் தாக்லா பகுதியில் சீனவீரர்களுக்கும் இந்தியவீரர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது.சௌத்ரி தலைமையில் போர்நடைபெற்று கொண்டிருந்தது.மூன்று பக்கத்தில் இருந்தும் சீனர்கள் தாக்குதல் நடத்தினர்.சௌத்ரி காயமுற்றிருந்த பொழுதும் கடுமையாகப்போராடினார்.ஆறு பேர் இறந்தனர் 11 பேர் காயமுற்றனர்.
சீனர்களின் தாக்குதல் அதிகரித்ததை உணர்ந்த கால் கதறினார்.பின்னர் இராணுவம் நமக்சூவை கைவிட்டது.சீனர்கள் போரை விரும்பாதவர்கள் போல் காட்டி கொண்டனர்.ஆனால் இந்திய ராணுவம் நமக்சூ பகுதியை கடந்ததும் அவர்கள் தடுத்துவிட்டனர்.சீனர்கள் நமது எல்லைக்குள் இருந்த இராணுவத்தினரை தாக்கினர்.அவர்கள் இந்திய எல்லைகளை சீனர்களுக்கு உரியது எனக்கூறிக்கொண்டனர்.
12 அக்டோபர் அன்று டெல்லியிலிருந்து புதியராணுவப்படை எல்லைக்கு விரைந்தது.11 அக்டோபரில் கால் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியிடம் நிலைமையை எடுத்துரைத்தார்.13 மற்றும் 19 அக்டோபர் ஆகிய நாட்களில் தாக்லாவிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள பகுதியில் சீனர்கள் டெம்போக்களின் அளவை அதிகரித்துக்கொண்டிருந்தனர்.அவர்கள் முன்னேறியப்பகுதிகளில் திபெத்தியக்குதிரைகளை உபயோகித்தனர்.டிஷேங் சாங் பகுதியில் 1978 சீனவீரர்கள் இருந்தனர்.
இந்திய ராணுவவீரர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை.நமக்சூ பள்ளத்தாக்கில் இராணுவவீரர்களுக்கு தேவையான மருத்துவவசதிகள் செய்துத்தரப்பட்டன.ஆனால் அது சிறந்ததாக இல்லை.17செப்டம்பரில் பஞ்சாபியர்கள் எவ்வித மருத்துவவசதியும் இன்றி போரிட்டனர்.சர்ஜிக்கல் குழுவிற்கு 9000 மைல் தொலைவில் ஆக்ஸிஜன் வசதிகூட முழுமையாக செய்துத்தரப்படவில்லை.20 அக்டோபர் காலையில் சீன இராணுவம் தனது மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்தியது.
நமக்சூவைக்கடப்பது என்பது இயலாத காரியமாகும்.சீனர்களின் ஆபத்து அதிகமாக இருப்பதால் டிசாங்கல் பகுதியை கைவிட கால் கட்டளையிட்டார்.கால் நமக்சூ பகுதியை கைவிட்டதற்கான காரணம் தெரியவில்லை.நமக்சூ பகுதியில் இருந்த இராணுவத்தை தளர்வாக்கியக்காரணமும் தெரியவில்லை.10 அக்டோபருக்குப்பின்னர் காலை டால்வி பார்க்கவேயில்லை.
16 அக்டோபரில் ஜெனரல் கால் சீனர்களை விரட்டியடிப்பது என்பது இயலாதக்காரியம் என்பதை மேலதிகாரிகளுக்கு தெரிவித்தார் .ஆனால் அவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை.நாம் சீனர்களை தவறாகப்புரிந்துக்கொண்டக்காரணத்தினால் அதிக ரத்தத்தையும் அவமானத்தையும் சிந்த வேண்டியிருந்தது.
ஜெனரல் கால் காய்ச்சலால் டேஸ்பூரிலிருந்து டெல்லிக்கு சென்று விட்டார்.அக்டோபர் 18,19 மற்றும் 20 ஆகிய நாட்களில் 7 பிரிகேட் தலைமையின்றி தவித்தது.29 அக்டோபரில் கால் காய்ச்சலிலிருந்து குணமாகி மீண்டும் பணியில் ஈடுபடத்தொடங்கினார்.அக்டோபர் 18 ல் கால் டெல்லிக்கு திரும்பியது அவரது கடைசி தவறாகும்.
20 அக்டோபரில் சீன இராணுவம் இந்தியராணுவத்தின் மீது போர் தொடுக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.மேலும் நேரு சீனா பெரிதாக எதையும் செய்துவிடாது என நம்பினார்.இந்தியாவின் நீண்ட கால கனவான அமைதி மற்றும் முன்னேற்றம் என்ற கோட்பாடு முடிவுக்கு வந்தது.20 அக்டோபரில் சீனர்கள் துப்பாக்கிகள் மற்றும் கனரக இயந்திரங்களுடன் போரில் ஈடுபட்டனர்.நமக்சூவில் நடந்த போரானது பானிபட் மற்றும் பிளாசி போரைப்போன்று இருண்டப்போராகும்.
சீனத்தாக்குதல் நடந்து சிலமணிநேரங்களிலியே 7 பிரிகேட் பயங்கரத்தாக்குதலுக்கு உள்ளாகியது.சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.பண்ட் என்ற ராஜபுத்திர வீரர் காயங்களுடன் கடுமையாகப்போரிட்டு சீன தாக்குதலை சமாளித்தார்.மேஜர் பண்ட் படையில் 112 பேரில் 82 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமுற்றனர்.
கூர்க்காக்கள் பயங்கரமாகப்போர் புரிந்தனர்.லெப்டினன்ட் அலுவாலியா காயம் அடைந்து சிறைபிடிக்கப்பட்டார்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இப்போரில் இந்தியா அடைந்த அவமானம் முடிவடைய பல வருடங்கள் ஆகும்.
21 அக்டோபர் அன்று டோவாங் பகுதி கைவிடப்பட்டது.சீனர்கள் லும்புப்பகுதியை அடைந்தனர்.லும்புப்பகுதியை கைப்பற்றினர்.இந்தியராணுவத்தினர் சீனர்களால் கைது செய்யப்பட்டனர்.அக்டோபர் 22 ல் சீன இராணுவத்திடம் டால்வி மாட்டிக்கொண்டார்.இராணுவத்தினர் பசியாலும் வயிற்றுப்போக்கிலும் பாதிக்கப்பட்டனர்.பலர் பசியால் இறந்துவிட்டனர்.இறந்தவர்களை சீனர்களால் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை ஏனெனில் அவர்கள் அடையாள அட்டை கூட உபயோகிக்கவில்லை.அவர்களது தியாகம் நமக்கு விழிப்புணர்வையும் நமது பலவீனத்தையும் பாதுகாப்பு குறைபாட்டையும் விளக்கியது.
இந்தியா 1947-ல் மோசமான தொடக்கத்தைத்தொடங்கியது.இந்திய விடுதலை இராணுவத்தை உபயோகிக்காமல் அமைதியான முறையில் பெறப்பட்டது.பின்னர் நேரு,காந்தி,படேல் முதலான தலைவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் பார்க்கப்படவில்ணலை அவர்கள் கடவுளாகப்பார்க்கப்பட்டனர்.ஆகஸ்ட் 15 1949 ஆம் ஆண்டு முன் அனுபவமில்லாத கரியப்பா ராணுவத்திற்கு தலைமைத்தாங்கினார்.சாதாரண அரசியல்வாதிகளுக்கு தேசிய அளவில் குறைந்த அளவு அறிவே இருந்தது.
வருத்தமான உண்மை என்னவெனில் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் ,இராணுவத்தினரும் கலந்து உரையாட எந்த மைதானமும் இல்லை.நமது அரசியல் அறிஞர்கள் நினைத்தது என்னவெனில் இந்தியா எந்தப்போருக்கும் போகாது.அணிசேராகொள்கையில் இருப்பதால் உலகளவில் நாம் அனைவருக்கம் நண்பர்களாக இருப்போம் எனபதுதான்.இந்தியராணுவம் காஷ்மீர் பிரச்சனை சரிசெய்யப்பட்டவுடன் கலைக்கப்பட்டது.
நாம் வறுமையை ஒழிப்பதற்காக முயற்சி செய்துக்கொண்டிருந்தோம்.உலக அரங்கில் இந்தியாவின் பெருமை ஒலித்தது.ஆனால் நமது சொந்தத்தவறுகளால் அதை இழந்தோம்.சீனா இந்தியா மீது போர்தொடுக்காது என்ற நம்பிக்கையில் இராணுவம் சார்ந்த விஷயங்களில் நாம் பெரிதாக ஈடுபட்டிருக்கவில்லை.ஏழை நாடான இந்தியாவில் இராணுவத்திற்காக அதிகளவில் செலவழிக்க முடியவில்லை.நாம் சீனாவுடனானப்போரை எதிர்பார்க்கவில்லை.நமது இராணுவத்தினரும் சீன இராணுவவீரர்களை வெல்வதற்கான பயிற்சியைப்பெற்றிருக்கவில்லை.
போருக்கு தயாராகாத இராணுவவீரர்களை சீனர்களை எதிர்த்துப்போரிட இராணுவம் அனுப்பியது.எந்த நாடும் தயார் நிலையில் இல்லாமல் போருக்கு செல்லாது.இதனால் 1962-ம் ஆண்டு ஏற்பட்ட போர் அதில் ஈடுபட்டவர்களுக்கு மோசமான ஒன்றாகும்.நாம் இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டவர்கள்.சுதந்திரத்திற்கு பின்னர் வரிஏய்ப்பவர்களாகவும் கருப்புபணம் மற்றும் வாரிசு அரசியல் போன்றவற்றிருக்குள் மாட்டிக்கொண்டோம்.இந்தியாவிற்கு தனது சொந்தவளங்களும் திறமைமிக்கமக்களும் போதுமானவர்கள் ஆவர்.நாம் தலைவர்களின் ஆத்திரமூட்டும் வார்த்தைக்கு நம்மை இரையாக்கிக்கொள்ளக்கூடாது.1959-62 காலக்கட்டத்தில் ஏற்பட்ட அலட்சியத்தன்மை மறுபடியும் ஏற்படக்கூடாது.

Comments
Post a Comment