Skip to main content

Himalayan blunder

 இந்த குறிப்புகள் ஹிமாலயன்  பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து  எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர்.      துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இ...

The special Relationship with india


 இந்த குறிப்புகள் மிட்ரோக்கின் அர்ச்சிவ் - 2 எனும் புத்தகத்தில் த ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப் வித் இண்டியா எனும் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டது.முதல் பகுதி  The Supremacy of the Indian National Congress இரண்டாவது பகுதி The Decline and Fall of Congress.


    பனிப்போர் காலக்கட்டத்தில் கேஜிபி மூன்றாம் உலக நாடான இந்தியாவில் பல தரப்பட்ட ஆப்ரேஷன்களை மேற்கொண்டது.ஸ்டாலின் காலத்தில் இந்தியா ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை என வருணிக்கப்பட்டது.ஸ்டாலின் காந்தியை வெறுத்தார்.சோவியத் என்சைக்ளோபீடியா மோகன்தாஸ் மகாத்மா காந்தியை நிராகரித்தது.1953 ஸ்டாலின் இறப்பது வரை  நேருவும் காந்தியைப்போன்று பிற்போக்கானவரானவராகவே ஸ்டாலினியவாதிகளால் அறியப்பட்டார்.

    நேரு அணிசேராத மாநாடுகளின் ஒரு தலைவராக அறியப்பட்டார்.அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நல்லுறவுடன் இருந்ததால் சோவியத் இந்தியாவுடனான உறவில் ஆழ்ந்த அக்கறை காட்டியது.குருசனேவ் காலக்கட்டத்தில் இந்திய சோவியத் உறவு வளர்ந்தது.ஹங்கேரியில் சுதந்திரமான தேர்தல் மற்றும் சோவியத் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற ஐநா தீர்மானத்திற்கு எதிராக இந்தி்யா வாக்களித்தது.இந்தியாவின் முக்கியத்துவத்தை சோவியத் உணரத்தொடங்கியது.

    கிருஷ்ணமேனன் என்பவர் சீனப்படையெடுப்பின் பொழுது பாதுகாப்புதுறை மந்திரியாக செயல்பட்டார்.பின்னர் நேருவால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.1967 தேர்தலில் தன்னிச்சையாகப்போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்டார்.இரண்டான்டுகளுக்குப்பின்னர் கம்யூனிஸ்ட் உதவியுடன் மேற்கு வங்காளத்தில் தன்னிச்சையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.1974 -ல் அவரது இறப்பிற்கு முன்னதாகவே அவர் இந்திய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

    1964-ல் நேரு இறந்தபின்னர் .குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.பின்னர் நேருவின் நெருங்கிய ஆதரவாளரான லால்பகதூர் சாஸ்திரி தேர்வுசெய்யப்பட்டார்.வலதுசாரியை சார்ந்த மொரார்ஜி தேசாய்க்கும் சாஸ்திரிக்கும் இடையிலான போட்டியில் சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.மாஸ்கோவும் இந்தமுடிவை ஆதரித்தது.ஏனெனில் தேசாய்க்கு அவரது சிறுநீரைக்குடிக்கும் பழக்கம் இருந்தது.1966 ல் ஏற்பட்ட சாஸ்திரியின் திடீர்மறைவின் காரணமாக நேருவின் மகளாகிய இந்திரா பதவி ஏற்றார்.  இவர் கேஜிபியால் VANO என்ற அடைமொழியால் வழங்கப்பட்டார்.

  
  1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் இறந்த சில மாதங்களுக்குப்பின்னர்  இந்திரா சோவியத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பொழுது அங்கிருந்த அழகிய ஆண்நிர்வாகிகள் அவரை சுற்றியவாறு இருந்தனர்.ஆனால் இந்திரா தனது தந்தைக்கு எழுதியக்கடிதத்தில் அவர்களைப்பற்றி  எதுவும் குறிப்பிடவில்லை.ரஷ்யன் தன்னிடம் இனிமையாகப்பழகியதாகவும் தன்னை அனைவரும் மகளைப்போன்று பாவித்ததாகவும் எழுதினார்.இரண்டு வருடங்களுக்குப்பிறகு இந்திரா நேருவுடன் சோவியத்திற்கு வரும் பொழுது குருசேவ் அவருக்கு மிங் கோட் ஒன்றை பரிசளித்தார்.

    இந்திரா பிரதமரான தொடக்கத்தில் ஷோஷியலிஸ்ட் எம்பி,டம்ப் டால் என வர்ணிக்கப்பட்டார்.1967-ல் நடைபெற்ற தேர்தலில் மாஸ்கோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும்,மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்திராவிற்கு எதிராகப்போரிட ஆதரித்தது.கேஜிபி அவர்களுக்கு நிதி உதவியும் அளித்தது.1967 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரணி 30 முதல் 40 சதவீத அளவிற்கு கூடுதல் வாக்குகளைப்பெற்றிருந்தது.காங்கிரஸ் 20 சதவீத வாக்குகளை இழந்திருந்தது.44 இடங்களுடன் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.பின்னர் தேசாய் துணைபிரதமராக செயல்பட்டார்.பின்னர் 1968-ல் தேசாயும்,காமராஜரும் இந்திராவை பதவியிலிருந்து விலக்க முடிவு செய்தனர்.இதன்காரணமாக காங்கிரஸ் பிளவுற்றது.இக்காலக்கட்டத்தில் இடது சாரிகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.இந்திரா 1969-ல் 14 வங்கிகளை நாட்டுடமையாக்கினார்.மற்றும் தேசாய் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.மாஸ்கோவின் ஆதரவுடன் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி இந்திராகாந்திக்கு ஆதரவாக செயல்பட்டது.காங்கிரஸ் (O)மற்றும் காங்கிரஸ்(R) என இரண்டாகப்பிரிந்தது.பிரிந்தபின் அவர்கள் குறிப்பிட்டனர் இந்திரா இந்தியாவை சோவியத்திடம் விற்று விட்டார் எனக்குறிப்பிட்டனர்.அவரது தனிப்பட்ட செயலாளரான பரமேஸ்வர் நரேன் கஸ்கேன் உதவியுடன் மாஸ்கோவுடன் நேரடி தொடர்பில் இருந்ததை குறிப்பிட்டனர்.இவர் இந்திராவின் இடதுகையாக செயல்பட்டார்.இதழாளர் மல்கோத்ரா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மெதுவாக தர்பாராக மாறிகொண்டிருக்கிறது எனக்குறிப்பிட்டார்.

    1971-ம் வருடம் இந்திரா மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.1971-ம் வருடம் இந்திரா சோவியத்துடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.இந்த உடன்படிக்கையை இந்திய ஊடகங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை.சோவியத்மக்களிடம் இந்திரா பிரபலமானவராக‍ அறியப்பட்டார்.சில சோவியத் குழந்தைகளுக்கு இந்திரா பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவிற்கு பாகிஸ்தானுடனான போரில் சோவியத் பல ராணுவ உதவிகளை செய்தது.லெனாய்டு செபரசனின் கூற்றுபடி அதிகப்பபடியான ஆயுதங்கள் டில்லிக்கு விரைந்தன.இந்த போர் தவிர்க்க இயலாத ஒன்று என சோவியத்  உணர்ந்தது.டிசம்பர் 2 சோவியத் எம்பஸியில் மின்சாரம் தடைபட்ட பொழுது போர் தொடங்கப்பட்டதை அவர் உணர்ந்தார்.அவர் ஜன்னலின் வழியாகப்பார்க்கும் பொழுது மொத்த தலைநகரமும் இருளில் மூழ்கியிருந்தது.

14 நாள்கள் நடந்தபோரில் யு எஸ் ,சீனா மற்றும் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டன.கிழக்கு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்காளதேசமாக உருவெடுத்தது.பாகிஸ்தான் 55 மில்லியன் மக்களைக்கொண்ட நாடாக மாறியது.இந்தியர்கள் இந்திராகாந்தியின் நல்லநேரம்  எனக்குறிப்பிட்டனர்.சோவியத் விவாதி யுனைடெட் நேஷனில் வரலாற்றில் முதல்முறையாக யு எஸ் மற்றும் சீனா ஒரே நேரத்தில் தோற்கடிக்கப்பட்டது எனக்கூறி மகிழ்ந்தார்.சோவியத் நிர்வாகத்தைத்தவிர்த்து கேஜிபி இந்தியாவின் பல பகுதிகளில் தனது நிர்வாகத்தை அமைத்தது.

ஒலெக்கலுக்கினின் நினைவுகளின்படி மூன்றாம் உலக நாடுகளில் கேஜிபி ஊடுருவதுவதற்கு இந்தியா ஒரு மாடல்.கலுக்கின் மேலும் நினைவுகூர்கையில் ஆண்ட்ரோபோவ் என்பவரிடம் இந்திய அமைச்சர் ஒருவர் 50000 டாலர்களை பெறுவதற்காக தனிப்பட்ட தகவல்களை கூறினார்.கேஜிபி அதற்கு முன்னதாகவே வெளியுறவு மற்றும் பாதுகாப்ப துறை அமைச்சர்களுக்கு தேவையான பொருட்களை விநியோகித்தது.இது மொத்தநாடும் விற்கப்பட்டது போன்றதாகும்.கேஜிபி மற்றும் CIA மொத்த இந்திய அரசாங்கத்திற்குள்ளும்  உள்வாங்கியது.கலுக்கினின் பார்வையினபடி CIA ஐ விட கேஜிபி ஊழலின் காரணமாக இந்திரா அரசாங்கத்தில் அதிகப்படியான வெற்றியைப்பெற்றது.

இந்தர்மல்கோத்ராவின் கூற்றுபடி ஊழல் ஒன்றும் இந்தியாவிற்கு புதிய விஷயமில்லை.மக்கள் பிரிக்கப்படாத காங்கிரஸிடம் இருந்ததைவிட அதிகப்படியான சமதர்மத்தை எதிர்பாரத்தனர்.அது நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பாக அமைந்தது.ஆனால் சொத்துகள் வழங்குவதில்பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கும்,ஊழலுக்கு பெயர் பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.சூட்கேஸ் முழுவதுமான பணம் இந்திராகாந்திக்கு வழங்கப்பட்டது. ஆனால் சூட்கேஸ் கூட திரும்பி வராது.இரண்டு மில்லியன் சோவியத் பணம் இந்திராவிற்கு நள்ளிரவில் வழங்கப்பட்டது.அதே நேரத்தில் இந்திராவிற்கு ஆதரவாக இருந்த செய்திதாளிற்கு மற்றொரு மில்லியன் பணம் வழங்கப்பட்டது.

    அதேநேரம் பிடெல் காஸ்ட்ரோவின் நெருங்கிய கூட்டாளியான அல்லெடிU.S காவலாளிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.பின்னர் அவர் தன்னைதானே சுட்டு இறந்ததாக காவலாளிகளால் கூறப்பட்டது.இதைஅறிந்த இந்திரா தன்னை கொலை செய்தால் தானாகவே தானும் இறந்ததாக கூறுவர் எனக்கூறினார்.இந்திராவின் சொந்தத்தவறாலேயே அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டிருந்தன.

    அலகாபாத் உயர்நீதிமன்றம் 1971 தேர்தலில் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்பு வழங்கியது.இதனால் இந்திரா எமர்ஜென்ஸியை நடைமுறைபடுத்தினார்.எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.1,10,000 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நேரத்தில் சோவியத் 10.6 மில்லியன் ரூபிள் இந்திராவிற்காக செலவு செய்தது.1976-ல் இந்திரா சோவியத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டார்.ரஷ்யமொழியில் அவரது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன.இந்திரா சோவியத்திலிருந்து திரும்புவதற்குள் அவரின் மகனின் கூட்டாளி சந்தேகத்திற்கு இடமான வகையில் அமெரிக்க தூதரகத்துடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.அரசுமயமாக்குவதை நிறுத்துவதாகவும் ,கம்யூனிஸ்டை இழிவு படுத்தும்விதமாகவும் பேட்டி அளித்தார்.அவருடைய பேட்டி வெளிப்படையாக இருந்தது.தார் என்பவர் சஞ்சய் கம்யூனிஸ்டுகளை பெரிய துயரத்திற்கு உள்ளாக்கியதாகவும் மொத்த சோவியத்தையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியதாகவும் கூறினார்.18 ஜனவரி 1977 இந்திரா நெருக்கடிநிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.மார்ச் மாதம் தேர்தலை அறிவுறுத்தினார்.சோவியத் கம்யூனிஸ்ட் மட்டும் அல்லாமல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் பல மானியங்கள் வழங்கியது.1977-ல் நடந்த தேர்தலில் முதல் இரண்டு மாதங்களுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலவு அளிக்கப்பட்டது.ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பொழுது கம்யூனிஸ்ட் கட்சியை சாராமல் தனித்துநின்று போட்டியிட்ட ஜனதாகட்சியை சார்ந்தவரான தேசாய் வெற்றிபெற்றார்.இந்திராவின் தோல்வியை மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கொண்டாடியதைப்போன்று வீதிகளில் நடனமாடி கொண்டாடினர்.

21 மார்ச் அன்று இந்திரா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.அநேக சோவியத்மீடியாக்கள் இந்திராகாந்தி தோற்ற காரணம் அவரது தவறான அரசாங்கமே என வருணித்தன.சோவியத்நிர்வாகம் தேசாய் இந்தோ-சோவியத் உறவை முடித்து விடுவார் என அச்சம் கொண்டது.ஆனால் அவர் அதை தொடர்ந்தார்.இது சோவியத்திற்கு நன்மை அளிக்கும் முடிவாகும்.ஜனதாகட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு பின்னர் 1980-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா தோல்வி அடைந்தார்.இந்திரா அதிகாரத்திற்கு வந்தபின்னர் அதிகாரம் அனைத்தும் சஞ்சய் வசம் இருந்தது.1980-ல் ஏற்பட்ட விமானவிபத்தில் சஞ்சய் இறந்தது சந்தேகத்திற்கு இடமின்றி சோவியத்தால் வரவேற்கப்பட்டது.அதே நேரம் கம்யூனிஷகட்சிகளின் ஆதரவும் இந்திராவிற்கு குறையத்தொடங்கியது.கம்யூனிஸ்டுகள் பல வதந்திகளை பரப்பத்தொடங்கினர்.மாநில அமைச்சர்களிடம் இந்திரா லஞ்சம் வாங்கியதாகவும் இந்திய விமானப்படையை விற்பதாகவும் முடிவு செய்தனர்.கம்யூனிஸ்டுகளை வழிபடுத்த வேண்டும் என சோவியத்திடம் வலியுறுத்தினார்.சோவியத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.CIA மற்றும் சீனா அஸாம் மற்றும் பழங்குடியினப்பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.CIA கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு பணத்தை வாரி இறைத்தது.இதற்காக ஜெயில்சிங் சீனா மற்றும் அமெரிக்காவினை பழித்தார்.

    அமெரிக்காவும் பாகிஸ்தானும் காலிஸ்தான் போராளிகளுக்கு மறைமுகமாக ஆதரவு காட்டியது.பாகிஸ்தான் தனி காலிஸ்தானுக்கு மறைமுகமாக தனது உதவிகரத்தை நீட்டியது.இந்திரா மூன்றாம் உலக நாடுகளின் முக்கிய தலைவராகக்கருதப்பட்டார்.பிடல் காஸ்ட்ரோ இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.இந்திய செய்திதாள்களில் காஸ்ட்ரோ மற்றும் இந்திராவின் புகைப்படங்கள் வெளியாகின.


    1983-ம் ஆண்டு ராஜீவ்காந்தி மாஸ்கோவிற்கு வருகைபுரிந்தார்.ராஜீவ்காந்தி சீக்கியபிரிவினைவாதிகளால் காங்கிரஸிருக்கு பிரச்சனைகள் உருவாகின்றன என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ஜூன் 1984-ல் இந்திரா சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் சண்டையிட ராணுவத்தை அழைத்தார்.பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகளை அனுப்பி இந்திராவை கொலை செய்யமேற்கொண்ட முயற்சி தோற்கடிக்கப்பட்டது.இந்திரா கேஜிபிக்கு நன்றி செலுத்தினார்.தனது சொந்த சீக்கிய காவலாளிகளாலேயே கொல்லப்பட்டார். இந்தியாவை மதசார்பற்ற நாடாக தைரியமாக அறிவித்தார்.அதற்கான விலையாக அவரது உயிரை விரைவாக இழந்தார்.

பின்னர் ராஜிவ்காந்தி பிரதமரானதும் கோர்பசேவை சந்தித்தார்.ராஜிவ் பதவியை இழக்கும் பொழுது சோவியத் வீழ்ந்திருந்தது.1991-ல் நரசிம்மராவ் பதவி வகித்த பொழுது கோர்பசேவ் பதவி விலகியிருந்தார்.கோர்பசேவ் வீட்டு காவலில் இருந்து வெளியேறிய பிறகு ராவுடனான தொடர்புக்கு முயற்சிக்கவில்லை.அத்துடன் இந்திய சோவியத் உறவு முடிவுக்கு வந்தது.






Comments