Skip to main content

Himalayan blunder

 இந்த குறிப்புகள் ஹிமாலயன்  பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து  எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர்.      துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இ...

கண்ணன் கதைகள்-குழந்தை பருவம்

முன்னொரு காலத்தில் ஹம்சன் என்ற அரசன் மதுராவை ஆண்டு வந்தான்.அவனுக்கு தேவகி என்றொரு சகோதரி இருந்தாள்.தனது சகோதரியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தான்.அவனது சகோதரிக்கு வசுதேவர் என்பவருடன் ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்தார்.திருமணம் முடிந்து ஊர்வலம் செல்லும் பொழுது ஹம்ஷன் தேரோட்டி சென்றான்.திடீரென வானில் கேட்ட அசரீரி தேவகியின் எட்டாவது மகனால் ஹம்ஷன் இறப்பான் எனக்குறிப்பிட்டது.



இதைக்கேட்ட ஹம்ஷன் அதிர்ச்சி அடைந்தான்.மேலும் ஆத்திரமுற்ற அவன் தனது தங்கையை கொல்ல முயன்றான்.அருகிலிருந்த வசுதேவர் அவனை தடுத்து தேவகியின் குழந்தைகளை அவனிடம் ஒப்படைப்பதாகக்கெஞ்சினார்.இதனால் மனம் மாறிய ஹம்ஷன் தேவகியை கொல்வதைத்தவிர்த்து தேவகியையும் வசுதேவரையும் சிறையிலடைத்தார்.


1




வசுதேவரின் ஆறு குழந்தைகளையும் ஹம்ஷன் இரக்கமின்றி கொன்றான்.ஏழாவது குழந்தையை யாருக்கும் தெரியாமல் கருவில் இடம் மாற்றினர்.பின்னர் நள்ளிரவு நேரத்தில் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார்.ஆனால் அக்குழந்தையை ஹம்ஷன் கொன்றுவிடுவான் என்று அஞ்சிய வசுதேவர் குழந்தையை இரவோடு இரவாக இடம்மாற்ற எண்ணிணார்.அதற்காக தனது நண்பரான நந்தகோபரின் வீட்டை தேர்வு செய்தார்.அதே நேரம் சிறைகதவுகள் தானாகவே திறந்து கொண்டன.சிறைகாவலாளிகள் மயக்கமுற்றிருந்தனர்.இதனால் வியப்புற்ற  வசுதேவர் கொட்டும் மழையில் குழந்தையை தூக்கி கொண்டு சென்றார்.

யமுனை நதியைக்கடந்து நந்தனின் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் நந்தனின் மனைவி யசோதையின் அருகில் தனது குழந்தையை வைத்துவிட்டு அங்கிருந்த குழந்தையை எடுத்து கொண்டு சிறை திரும்பினார்.
தேவகியின் அருகிலிருந்த குழந்தை அழத்தொடங்கியது.இதனால் மயக்கம் கலைந்த சிறைதுறை அதிகாரிகள் ஹம்ஷனிடம் சென்று குழந்தை பிறந்த செய்தியை கூறினர்.இதனால் அதிர்ச்சியுற்ற ஹம்ஷன் குழந்தையை கொல்ல தூக்கி எறிந்தான்.அக்குழந்தை துர்க்கையின் அம்சமாக வெளிப்பட்டது.பின்னர் ஹம்ஷனிடம் உன்னை கொல்ல வந்தவன் பிறந்துவிட்டான் தேவையின்றி குழந்தைகளை கொல்வதைத்தவிர் என எடுத்துரைத்தாள்.ஹம்ஷன் துர்க்கையின் பக்தன் என்பதால் மனம்மாறினான் .ஆனால் தீயநண்பர்களின் சேர்க்கையால் மீண்டும் மனம் மாறி அந்தத்தருணத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கொல்ல எண்ணினான்.கண்ணன் பிறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னதாக வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணிக்கு பலராமர் பிறந்தார்.நந்தகோபர் ஹம்ஷனுக்கு வரி கட்டுபவர்.வரிகட்டுவதற்காக மதுரா சென்றிருந்தார்.அப்பொழுது அவரை சந்தித்த வசுதேவர் அங்கு நடந்ததை கேட்டறிந்தார்.பின்னர் நந்தகோபர் வீடு திரும்பினார்.


2

    கண்ணன் பிறந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளை கொலை செய்ய எண்ணிய ஹம்ஷன் பூதனை என்ற அரக்கியை அனுப்பினான்.அவள் அழகியப்பெண்ணைப் போன்று உருமாறி கோகுலம் சென்றாள்.யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை எடுத்து சென்று விஷம்கலந்த பாலை அருந்த செய்தாள்.ஆனால் கண்ணன் கடவுள் ஆகியதால் உற்சாகமாக பால் அருந்தினான்.மேலும் அரக்கியாகிய பூதனை வலியால் துடித்து இறந்தாள்.இதைக்கண்ட கோகுலவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் அவளது பூதஉடலை எரித்தனர்.

    பின்னர் ஒருநாள் திருணாவர்த்தன் என்ற அரக்கன் சூறாவளி உருவம் எடுத்து குழந்தையை கடத்தி சென்றான்.கோகுலம் எங்கும் புழுதி பறந்து கொண்டிருந்தது.குழந்தையை காணாமல் கோகுலவாசிகள் தேடிக்கொண்டிருந்தனர்.அதிக தூரத்திற்கு மேலே சென்று குழந்தையை கீழே தள்ளி விடுவதுதான் அரக்கனின் திட்டம்.ஆனால் மேலே செல்ல செல்ல குழந்தையின் பாரம் அதிகரித்து அரக்கன் கீழே விழுந்து இறந்தான்.குழந்தைக்கு ஒன்றும் ஆகாததை அறிந்த யசோதை மகிழ்ந்தாள். 




3

    கண்ணனும் பலராமனும் தவழும் பருவத்தைக்கடந்து நடக்கும் பருவத்திற்கு மாறினர் .அவர்களது குறும்பும் அதிகரித்தது.கோபியர் யசோதையிடம் பலதரப்பட்ட முறையில் புகார்களைக்கூறினர்.கண்ணன் மிகப்பயங்கரமான வெண்ணெய்திருடனாக அறியப்பட்டான்.அனைத்து கோபியர் வீடுகளிலும் வெண்ணெயை திருடி தின்று விட்டு தான் அந்த வீட்டின் சொந்தகாரன் என்றும் கோபியர்கள்தான் திருடிகள் என்றும் கூறி கொண்டிருந்தான்.
                                                          
 ஒருநாள் பலராமனும் மற்ற சிறுவர்களும் கண்ணன் மண்னை தின்று விட்டான் என தேவகியிடம் முறையிட்டனர்.பதறிய தேவகி கண்ணனின் வாயை திறந்ததும் மொத்தபிரபஞ்சமும் அவன் வாயில் தெரிய ஆரம்பித்தது.

    ஒருநாள் கண்ணன் வெண்ணெய்திருட முயலும் பொழுது பானை உடைந்து வெண்ணெய் வீதி எங்கும் கொட்டியது .இதையறிந்த யசோதா கண்ணனை கடிந்து கொண்டு உரலில் கட்டினாள்.நகரமுடியாமல் கண்ணன் ஊர்ந்து சென்று கொண்டிருந்தான்.அப்பொழுது இரட்டை மரங்களுக்கிடையே தனது உரலைக்கொண்டு சென்றான்.அவ்வாறு கொண்டு சென்றால் கயிறு அறுந்து தான் கட்டிலிருந்து விடுபடலாம் என எண்ணினான்.ஆனால் கயிறு அவிழ்வதற்கு பதிலாக மரம் முறிந்து விழுந்து விட்டது.மரத்திலிருந்து இரண்டு தேவர்கள் வெளிப்பட்டனர்.அவர்கள் குபேரனின் மகன்கள்.தங்கள் தீயசெயல்கள் காரணமாக மரமாக மாறுமாறு சபிக்கப்பட்டனர்.கண்ணனின் பாதம் பட்டதும் மறுபடியும் தேவர்களாக மாறினர்.


    

4

    அசுரர்களின் தொடர் துன்புறுத்தல்களால் விரக்தியுற்ற கோகுலவாசிகள் பிருந்தாவனத்திற்கு இடம்மாறினர்.ஒருநாள் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த பொழுது வத்சாசுரன் என்ற அரக்கன் கன்று போல் உருமாறி மற்ற கன்றுகளோடு கலந்து விட்டான்.ஆனால் கண்ணன் அதை ஒருவழியாகக்கண்டுபிடித்தான்.பின்னர் அக்கன்று குட்டியின் அருகில் சென்று அதன் பின்னங்கால்களை சுற்றி  மரத்தில் முட்ட வைத்து அடித்தான்.கீழே விழுந்த கன்று மறுபடியும் அசுரனாக உருமாறியது.

        ஹம்ஷனது நெருங்கிய நண்பனான பகாசுரன் கொக்கு உருவத்தில் கண்ணனை கொலை செய்ய எண்ணி அவனை விழுங்கினான்.தனது அலகுகளால் கண்ணனை குத்தினான்.சுதாரித்து கொண்ட கண்ணன் கொக்கின் அலகுகளை உடைத்து எறிந்தான்.

அகாசுரன் என்ற அரக்கன் மலைபாம்பு உருவத்தில் வாயை திறந்தவாறு படுத்திருந்தான்.மற்ற சிறுவர்கள் அவனை குகை என்று நினைத்து உள்ளே சென்றுவிட்டனர்.கண்ணன் எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் பாம்பின் வாய்க்குள் நுழைந்து விட்டனர்.ஆபத்தை உணர்ந்த கண்ணன் பாம்பின் வாயில் நின்று வாயை கிழித்து விட்டான்.இதனால் பாம்பு உயிரிழந்தது.கண்ணனின் நண்பர்களும் உயிர்பிழைத்தனர்.
கழுதை உருவில் வந்த தேனுகாசுரனும் கண்ணனிடம் உயிரிழந்தான்.

5


 யமுனை நதியில் காளிங்கன் என்ற விஷபாம்பு விஷத்தை கக்கிக்கொண்டிருந்ததது.அதன் விஷத்தின் காரணமாக மொத்த யமுனை நதியும் கருமை நிறத்திற்கு மாறி இருந்தது.கண்ணன் ஆற்றில் குதித்ததும் காளிங்கன் வெளியே வந்தான்.காளிங்கன் கண்ணனை தனது விஷப்பற்களால் கடித்தான்.காளிங்கனை அடக்க நினைத்த கண்ணன் அவனது தலையில் ஏறி நடனமாடத்தொடங்கினான்.இதனால் வலிதாங்க முடியாத காளிங்கன் கண்ணனிடம் மன்றாடி உயிர் பிழைத்து  கடலில் சென்று வாழ்ந்தது.


        பிருந்தாவனவாசிகள் இந்திரனை வழிபடுவது வழக்கம்.அவர்கள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது கண்ணன் தனது தந்தையை சந்தித்தார்.அப்பொழுது அவரது தந்தை இந்திரன் மழைக்கான கடவுள் அதனால் அவரை வணங்க வேண்டும் எனக்கூறினார். பின்னர் கோவர்த்தனகிரி மலையே நமக்கு பல வழிகளில் உதவுகிறது.அதைதான் நாம் வணங்க வேண்டும் எனவும் விளக்கினார்.பின்னர் பிருந்தாவனவாசிகளும் கோவர்த்தன மலையை வணங்கினர்.இதனால் கோபமுற்ற இந்திரன் அடைமழையைப்பொழிய வைத்தான்.இதனால் பாதிக்கப்பட்ட கோகுலவாசிகள்
கதறினர்.இதையறிந்த கண்ணன் கோவர்த்தனகிரியை மேலே தூக்கினான்.அனைத்து பிருந்தாவனவாசிகள் மலையிடம் அடைக்கலம் புகுந்தனர்.பின்னர்  அடைமழை பொழிவது நின்றது.மக்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

6

ஒரு வழியாக கண்ணனை பற்றி அறிந்த ஹம்ஷன்  அக்ரூரை அனுப்பி கண்ணனை அழைத்து வர அனுப்பினான்.அக்ரூரர் கண்ணனை அனுகி     ஹம்ஷன் கண்ணனை கொல்ல நினைப்பதையும் அவரது தாய் தந்தையை பற்றிய உண்மையயையும் கூறினார்.பின்னர தன்னோடு மதுராவிற்கு வருமாறு அழைத்தார்.கண்ணனும் பலராமரும் அவருடன் மதுரா சென்றனர்.
மதுரா சென்ற பின்னர் அங்குள்ள தெருக்களில் சுற்றி திரிந்தனர்.ஹம்ஷன் யாகத்திற்காக வைத்திருந்த வில்லை உடைத்தனர்.பின்னர் மல்யுத்தம் நடைபெற்றது.அச்சிறுவர்கள் இருவரும் மல்யுத்த வீரர்களை தோற்கடித்தனர்.பின்னர் பல மல்லர்கள் அவர்களை தாக்கினர்.அனைவரையும் தாக்கி வெற்றி பெற்றனர்.



இதையறிந்து சினமுற்ற ஹம்ஷன் அவர்களை சிறையிலடைக்க எண்ணினார்.
கண்ணன் தன்னை நோக்கி பாய்ந்து வருவதை அறிந்த ஹம்ஷன் எழுந்து நின்று 
தன் வாளை எடுத்தான்.கண்ணன் அவனை தரையில் தூக்கி எறிந்தான்.ஹம்ஷன் இறந்தான்.பின்னர் ஹம்ஷனின் தந்தையை சிறையிலிருந்து விடுவித்து அரசராக்கினர்.வசுதேவரும் தேவகியும் சிறையிலிருந்து மீட்கப்பட்டனர்.பின்னர் கண்ணனும் பலராமரும் மதுராவில் வாழத்தொடங்கினர்.


Comments